[go: up one dir, main page]

பிரதான உள்ளடக்கத்திற்குச் செல்

சமூகத்தில் இணையுங்கள்

எத்தேரியம் சமூக மையத்திற்கு வரவேற்கிறோம்

எத்தேரியம் சமூகம் என்பது நூறாயிரக்கணக்கான உருவாக்குநர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், வடிவமைப்பாளர்கள், பயனர்கள், HODLers மற்றும் ஆர்வலர்களின் இல்லமாகும்.

ஏன் ஈடுபட வேண்டும்?

உங்கள் குழுவைக் கண்டறியுங்கள்

ஒவ்வொருவருக்கும் ஒரு குழு இருக்கிறது. எத்தேரியத்தைப் பற்றி ஒன்றாக விவாதிக்க, சிந்திக்க மற்றும் கொண்டாட ஒத்த எண்ணம் கொண்ட நபர்களைக் கண்டறிந்து இணையுங்கள்.

வாழ்க்கைக்குச் சம்பாதியுங்கள்

ஒவ்வொருவருக்கும் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளன. அர்த்தமுள்ள வேலையைக் கண்டறியவும், அதைச் செய்வதற்கு நல்ல ஊதியம் பெறவும் எத்தேரியம் உங்களை அனுமதிக்கிறது.

ஒரு மாற்றத்தை ஏற்படுத்துங்கள்

எத்தேரியத்தில் ஈடுபடுவது, மில்லியன் கணக்கான மக்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு தொழில்நுட்பத்தில் செயலில் உள்ள ஒரு பங்குதாரராக இருக்க உங்களை அனுமதிக்கிறது.

நான் எவ்வாறு இதில் ஈடுபடலாம்?

வேகமாக வளர்ந்து வரும் எத்தேரியம் சமூகத்தில் ஈடுபடப் பல வழிகள் உள்ளன; நீங்கள் பிரபலமான ஆன்லைன் சமூகங்களில் ஒன்றில் சேரலாம், ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளலாம், ஒரு சந்திப்புக் குழுவில் சேரலாம், ஒரு திட்டத்திற்குப் பங்களிக்கலாம் அல்லது எத்தேரியம் பற்றிய பல ஆன்லைன் மன்றங்களில் ஒன்றில் பங்கேற்கலாம்.

ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்
பெட்டகம் போன்ற உடலைக் கொண்ட இயந்திர மனிதனின் படம், இது எத்தேரியம் பணப்பையைக் குறிக்கிறது.

ஆன்லைன் சமூகத்தில் சேரவும்

உங்கள் குழுவைக் கண்டறிந்து மற்ற எத்தேரியம் ஆர்வலர்களுடன் சமூகத்தில் பங்கேற்கவும்.

ஈதர் (ETH) குறியைப் பிரமிப்போடு பார்த்து வியக்கும் மக்களின் படம்.

Ethereum நிகழ்வுகள்

ஒரு எத்தேரியம் மாநாடு, ஹேக்கத்தான் அல்லது சந்திப்பைக் கண்டறிந்து அதில் பங்கேற்கவும்.

கணினியைப் பயன்படுத்தும் நாயின் படம்.

ஒரு திட்டத்திற்குப் பங்களிக்கவும்

உங்கள் திறன்கள் மற்றும் தொழில்முறைப் பின்னணியின் அடிப்படையில் நீங்கள் பங்களிக்கக்கூடிய வழிகளின் பட்டியலுக்கு, எப்படி ஈடுபடுவது என்பதைப் பார்க்கவும்.

கணினியைப் பயன்படுத்தும் நாயின் படம்.

மானியங்களைத் தேடுங்கள்

ஒரு திட்டத்தைத் தொடங்குவதற்கு உங்களுக்கு உதவ நிதி மானியங்கள் கிடைக்கின்றன.

உருவாக்குபவரா? கட்டமைப்பவரா? உங்கள் உழைப்புக்கு ஊதியம் பெறுங்கள்.

நீங்கள் எத்தேரியத்தில் உருவாக்குகிறீர்களா, அல்லது உருவாக்க விரும்புகிறீர்களா? நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு ஆட்களை நியமிக்கின்றன. உங்களுக்கென ஒரு யோசனை இருக்கிறதா? உங்கள் திட்டத்தைத் தொடங்குவதற்கு ஒரு மானியத்தைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.

உங்கள் உழைப்புக்கு ஊதியம் பெறுங்கள்

ethereum.org தளத்தில் உங்கள் பங்களிப்பை வழங்கிடுக

பலருக்கு, ethereum.org என்பது இந்தச் சூழலமைப்பிற்குள் அவர்கள் எடுத்து வைக்கும் முதல் படியாகும். இது ஆயிரக்கணக்கான திறந்த மூலப் பங்களிப்பாளர்களால் புதுப்பித்தலாகவும் துல்லியமாகவும் வைக்கப்பட்டுள்ளது. உதவ விரும்புகிறீர்களா? பங்களிப்பது குறித்த எங்கள் வழிகாட்டியைப் படிக்கவும் அல்லது எங்கள் GitHub இல் ஒரு சிக்கலை எடுத்துக்கொள்ளவும்.

எத்தேரியம் படிகங்களால் இயக்கு சக்தி அளிக்கப்பட்டு எதிர்காலத்தில் இருக்கக்கூடிய ஒரு கணிணி அமைப்பின் படம்.

Ethereum தொடர்பான உதவி

ஆதரவு தேவையா? அதிகாரப்பூர்வ எத்தேரியம் ஆதரவு எதுவும் இல்லை, ஆனால் எத்தேரியத்தில் நீங்கள் செழிக்க உதவ நூற்றுக்கணக்கான உதவிகரமான சமூகங்கள் உள்ளன.

ஆதரவு

எத்தேரியத்தை நீங்களே முயன்று பாருங்கள்

இந்தப் பக்கம் உதவியாக இருந்ததா?