BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ஜெர்மனி, போலந்து தலைவர்கள் கூறுவது என்ன?
ரஷ்யா குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மேற்கத்திய தலைவர்கள் கேள்வி எழுப்பிய ஒரு காலம் இருந்தது. அப்போது ஜெய்சங்கர் நேரடியாக பதிலளிப்பார். ஆனால் இப்போது, ஜெய்சங்கர் எச்சரிக்கையுடன் பேசுகிறார். இது எதைக் குறிக்கிறது?
காணொளி, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 5 சிறப்பான சம்பவங்கள், கால அளவு 4,15
இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.
'பொங்கல், தீபாவளி என எதுவுமில்லை' - ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் சந்திக்கும் சிரமங்கள்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான நாட்டு இன காளைகளைத் தொடர்ந்து வளர்த்து வரும் மதுரை தொட்டியபட்டி கிராம மாடு வளர்ப்பவர்கள், மேய்ச்சல் நிலப் பற்றாக்குறை மற்றும் தங்களுக்குரிய சமூக அங்கீகாரம் கிடைக்காத வேதனையில் உள்ளனர்.
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு விவகாரத்தில் வலுக்கும் இந்தியா, சீனா மோதல் - முழு பின்னணி
ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கின் மீதான தனது பிராந்திய உரிமையை சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் அதன் உள்கட்டமைப்புத் திட்டங்கள் முற்றிலும் சட்டபூர்வமானவை என்று கூறியுள்ளது. ஆனால் இந்தக் கூற்றை இந்தியா நிராகரித்துள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசு - முழு விவரம்
இந்த ஆண்டுக்கான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜனவரி 15) காலை தொடங்கி, 12 சுற்றுகளுடன் மாலையில் நிறைவடைந்தது.
'தலைவர் தம்பி தலைமையில்' விமர்சனம் - நடிகர் ஜீவாவின் கம்பேக் திரைப்படமா?
ஜீவா கதாநாயகனாக நடித்து, நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் எப்படி இருக்கிறது? இது ஜீவாவுக்கு கம்பேக் திரைப்படமாக அமையுமா?
நேரலை, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம்.
இரானில் இணைய முடக்கத்தை தாண்டி போராட்ட செய்திகள் பரவுவது எப்படி? ஸ்டார்லிங்க் உதவுகிறதா?
இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தாலும், இரானில் நடைபெறும் போராட்டங்கள் தொடர்பான செய்திகள் மற்றும் படங்கள் இன்னும் நாட்டுக்கு உள்ளேயும் உலகின் பிற பகுதிகளுக்கும் சென்றடைந்து வருகின்றன. இது சாத்தியமாவது எப்படி? ஈலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இதில் எப்படி உதவுகிறது?
75 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா முக்கிய முடிவு – பாகிஸ்தானும் சேர்க்கப்பட்டதால் விவாதம்
அமெரிக்காவிற்குள் நுழைய விரும்பும் 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு, குடியேற்ற விசா வழங்கும் நடைமுறையை காலவரையற்ற முறையில் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியாவில் '10 நிமிட' டெலிவரி சேவையை நிறுத்துமாறு இ-காமர்ஸ் செயலிகளுக்கு அரசு அறிவுறுத்தல்
டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் '10 நிமிட' டெலிவரி சேவை நிறுத்தப்படுகிறதா? இ-காமர்ஸ் செயலிகளுக்கு அரசின் வலியுறுத்தல் என்ன?
பொங்கல் இந்த ஆண்டு ஜனவரி 15க்கு மாறியது ஏன்? அறிவியல் பின்னணி
பொங்கல், சங்கராந்தி ஆகியவற்றின் தேதி 72 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாள் தள்ளிப் போவது ஏன்? பஞ்சாங்கக் கணக்கீடுகளும் கணிப்புகளும் தவறாவது ஏன்? அறிவியல் என்ன சொல்கிறது?
வீணான கே.எல். ராகுல் சதம் – நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சறுக்கியது எங்கே?
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குறுங்காணொளிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா ஒரு வீரரைக் கூட இழக்காமல் வெனிசுவேலா அதிபர் மதுரோவை சிறைபிடித்தது எப்படி?
"அவர் கதவு வரை வந்தார். ஆனால் அதை மூட முடியவில்லை. அவ்வளவு வேகமாக அவரைச் சுற்றி நெருங்கிவிட்டார்கள். அதனால் அவர் அந்த அறைக்குள் செல்லவே முடியவில்லை."
கீழடியை விட்டு சுமார் 1,150 ஆண்டுக்கு முன்பு மக்கள் வெளியேறியது ஏன்? ஆய்வில் புதிய தகவல்
பல நூற்றாண்டுகளாக செழிப்புடன் இயங்கி வந்த கீழடி நகரத்தில் இருந்த மக்கள் அந்த இடத்தைக் கைவிட்டு எப்போது வெளியேறினார்கள்? அங்கே என்ன நடந்தது? இந்தக் கேள்விகளுக்கான பதிலை புதிதாக வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை தருகிறது.
சவப்பெட்டியில் மண்ணுக்குள் புதைந்த நிலையில் 61 நாட்கள் இவர் தாக்குப்பிடித்தது எப்படி?
வரலாறு நெடுக சித்திரவதைக்கான ஒரு வழியாக இருந்த, நம்மில் பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் ஒரு விஷயத்தை ஐரிஷ் தொழிலாளியான மிக் மீனி செய்யத் துணிந்தது ஏன்?
மயானத்துக்கு வேலி போட்ட வக்ஃப்: 'அரசு நிலம்' என கொதிக்கும் மக்கள் - ஈரோட்டில் என்ன பிரச்னை?
தாளவாடி தாலுகாவில் பனகஹள்ளி, பாளையம் ஆகிய இரு கிராமங்களுக்குப் பொதுவாக இருந்த மயானத்தை வக்ஃப் நிலமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இக்கிராம மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இறந்த மகனின் கடனை கட்டச் சொன்ன வங்கி: வீடு, வாகனம், வணிக கடனுக்கு காப்பீடு எடுக்கையில் கவனிக்க வேண்டியவை
கடன் தொகைக்கு காப்பீடு எடுத்த நபரின் குடும்பத்தினருக்கு தீர்வு வழங்காமல் மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி 30 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்குமாறு, சென்னை வடக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த 4 போராட்டங்களும் திமுகவுக்கு தேர்தலில் நெருக்கடியாக அமையுமா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், போராட்டங்கள் ஆளும் திமுக அரசுக்கு நெருக்கடியாக மாறியுள்ளதா?
நாய்க்கடியால் இறந்த எருமையின் பாலில் இருந்து ரேபிஸ் பரவுமா? மருத்துவமனைக்கு மக்கள் படையெடுப்பு
உத்தரபிரதேசத்தின் பதாவுன் மாவட்டத்தில் இறந்தவர் ஒருவரின் 13ம் நாள் சடங்கில் பச்சடி சாப்பிட்ட சுமார் 200 பேர் ரேபிஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும் விருத்தசேதனமா? ஆந்திராவில் புதிய சர்ச்சை
ஆந்திராவில் முஸ்லிம்களைத் தவிர பிறருக்கும் விருத்தசேதனம் செய்யப்படுகிறதா? இந்தியாவில் யூத மக்கள் தொகை குறைவாக இருப்பதாலும், கிறிஸ்தவர்களிடையே அது கட்டாயமில்லை என்பதாலும், பெரும்பாலான மக்கள் விருத்தசேதனம் என்பது இஸ்லாமிய வழக்கமாகவே அறிந்திருக்கிறார்கள்.
முஸ்தஃபிசுர் விவகாரம் - டி20 உலக கோப்பை, கேகேஆர் மற்றும் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ராஜ்ஜிய ரீதியாகவும், விளையாட்டு ரீதியாகவும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் சங்கம் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது.
சௌதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பதற்றம் அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு என்ன பிரச்னை?
முஸ்லிம் உலகின் ஒரே அணுசக்தி நாடான பாகிஸ்தான், பாரம்பரியமாக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு நாடுகளுடனும் நீண்டகால நட்புறவைக் கொண்டுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் எதிர்காலத்தில் அதிகரிக்கக் கூடுமா? இது பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
'யோனியில் புகையிலை' - மேற்கு ஆப்பிரிக்க பெண்கள் இந்த போதைப் பொருளுக்கு அடிமையானது ஏன்?
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில், பெண்கள் தங்கள் யோனிப் பகுதியில் 'டபா' எனும் புகையிலை பசையை வைத்துக்கொள்ளும் ஆபத்தான பழக்கத்தால், புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைவது எப்படி? அதனால் உங்களுக்கு என்ன பலன்?
பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.
இஸ்ரேல் – இரான் மோதல்
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்


