டெல்லி தோல்விக்கு வெங்காயமே காரணம்: காங்கிரஸ் கருத்து
1 Min Read
டெல்லி தோல்விக்கு வெங்காயமே காரணம்: காங்கிரஸ் கருத்து
Published:Updated:


புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெங்காயங்களும் மற்றும் காய்கறிகளும் எங்களை கீழே இறக்கி விட்டுள்ளன என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மானு சிங்வி கூறுகையில், "டெல்லியில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளதை ஒத்து கொள்கிறேன். இது ஒரு மோசமான தோல்வி. எனினும் டெல்லியில் ஷீலா தீட்சித் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.
| ##~~## |
டெல்லியில் வெங்காயங்களும் மற்றும் காய்கறிகளும் எங்களை கீழே இறக்கி விட்டுள்ளன. ஆம் ஆத்மி கட்சி பாரதீய ஜனதாவிற்கு ஏற்படுத்திய பாதிப்பை விட எங்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அலை வீசியுள்ளது" என்றார்.